2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளரை அனுப்ப ஐ.நா இணக்கம் இல்லை

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்திருந்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.

போதியளவு  நேரமின்மையே இதற்கான காரணமென ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசக்கி தெரிவித்தார்.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு  இலங்கை அரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர்  ஐக்கிய நாடுகளிடம் கோரியிருந்ததாகவும் மார்ட்டின் நெசக்கி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்கவேண்டுமானால், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்லது பாதுகாப்புச் சபையில் அனுமதி பெறவேண்டுமெனவும் அவர் கூறினார்.  இவ்வாறு அனுமதி பெறுவதற்கு போதியளவு நேரமின்மை காணப்படுவதாலேயே இதனை நிராகரித்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசக்கி தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .