2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஹைட்டியில் பாரிய பூமியதிர்ச்சி: ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டியில்  நேற்று இரவு பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த  பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியிருந்தது.  இதன்போது, பலர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. எனினும், இது தொடர்பில் மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஹைட்டியில்  கடமையில் ஈடுபட்டிருக்கும்  இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .