2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு இலங்கை ஜனாதிபதி உதவினார்-லலித் வீரதுங்க

Super User   / 2010 ஜனவரி 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டதன் மூலம் கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உதவினார்.

இவ்வாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க டெயிலிமிரர் இணைய தளத்துக்கு தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்களை பாவிக்கக்கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்திய நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்றும் லலித் வீரதுங்க மேலும் கூறினார்.

இதேவேளை,இந்த விவகாரம் குறித்து மேலதிக விவரங்கலை தாம் எதிர்பார்த்துள்ளதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் ஜனநாயக ரீதியிலான தேர்தலின் உள்விவகாரத்தில் வெளிநாடொன்று வியப்புக்குரியது என பாரதீய ஜனதா கட்சியின் பிரதிநிதியான சிரி நளின் எஸ்.கொக்லி டெயிலிமிரர் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .