2021 ஜூன் 16, புதன்கிழமை

சரத் பொன்சேகாவின் மருமகன் சிஐடி முன் ஆஜராகுமாறு பணிப்பு

Super User   / 2010 ஜனவரி 20 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் முன்னிலையில் இன்று அல்லது நாளை ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் நெருங்கிய வட்டாரங்கள் இத் தகவலை டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு  தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளுடன் யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் சரத் பொன்சேகா  லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டிருந்ததுடன், ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு பெருந்தொகையான பணத்தை இலாபம் ஈட்டியிருந்ததாகவும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சரத் பொன்சேகாவின் மருமகன் ஆயுதக் கொள்வனவின் மூலம் இலாபம் ஈட்டியமை தொடர்பில் ஆதாரங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .