2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

அரசின் பொய் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறக்கூடாது- சரத் பொன்சேகா

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் தனக்கு இருப்பதாக எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும், இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் தான் வாக்களிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

2008ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தனது பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், தனக்கு வாக்களிப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி தனக்கு இருப்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரங்களினாலும்,  தவறான தகவல்களினாலும் மக்கள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாதெனவும் ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .