2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியானார்

Super User   / 2010 ஜனவரி 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில்  இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளார். 

ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் 57.88 வீதமான வாக்குகளைப் பெற்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்க நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு 6,015,934  வாக்குகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, எதிர்க்கட்சி கூட்டணிகளின்  பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .