2021 ஜூன் 17, வியாழக்கிழமை

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை மீள்குடியேற்றுமாறு ஜப்பான் கோரிக்கை

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கட்சுய ஒக்கடா விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அத்துடன், நாட்டின் சமாதானத்திற்கான அரசியல் தீர்வினை முன்னெடுக்குமாறும் அவர் கூறினார்.  இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசாங்கம் ஆதரவு வழங்கும் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தைக் மீளகட்டியெழுப்புவதில் ஒன்றுபடவேண்டும் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கட்சுய ஒக்கடா விடுத்திருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவாகியமைக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .