2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஜனாதிபதி விரைவில் பேச்சுவார்த்தை?

Super User   / 2010 பெப்ரவரி 01 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  தாம் தயாராகவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உரிய அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாரெனவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு  அவர் கூறினார். 

தமிழ் மக்கள் தொடர்பில்  இதய சுத்தியுடனான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி தயாரெனின், அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளுமெனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .