2021 ஜூன் 21, திங்கட்கிழமை

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் எங்கே?

Super User   / 2010 பெப்ரவரி 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து காணாமல்போன லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நலிகொட இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அமைப்புகள்  அக்கறை கொண்டுள்ளன. 

இதேவேளை, காணாமல்போன லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன், குறித்த ஊடகவியலாளரின் மனைவியிடம் விசாரணைகள் நடத்தியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில்
அரசாங்கமும், பொலிஸாரும் சிறந்த முறையில் செயற்படவில்லை என சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .