2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகா திடீர் கைது:இராணுவ நீதிமன்றத்தின் முன் விசாரணை

Super User   / 2010 பெப்ரவரி 08 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத்தளபதியும்,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா திடீர் என கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவப்பொலிஸாரினால் இன்று இரவு ஒன்பதரை மணியளவில் ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டனர் என ஜனனாயக மக்கள் கட்சியின் தலைவர் மனோ கணேசன் டெயிலி மிரர் இணையதளத்துக்குத்தெரிவித்தார்.

இராணுவக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெனரல் பொன்சேகா தமது கொழும்பு அலுவலகத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார் என இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தினார்.

இதேவேளை,ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்படுவதை படம் பிடித்த எமது டெயிலிமிரர் புகைப்படப்பிடிப்பாளர்,ஏஎப்பி பத்திரிகையாளர் ஆகியோரின் கமராக்கள் இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி,ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .