2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் புதிய பஸ் சேவை

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிலிருந்து ஏனைய பகுதிகளுக்கான பயணிகள் பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு யாழ் குடாநாட்டிலிருந்து  மேற்படி பஸ் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமல் குமாரகே குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு 8 அதி சொகுசு பஸ்களும், சொகுசு பஸ்களும்  சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதி சொகுசு  பஸ்ஸில் பயணிக்கும் பயணி ஒருவருக்கு 1,035 ரூபா கட்டணமாக அறவிடப்படவிருக்கும் அதேவேளை, சொகுசு பஸ்ஸில் பயணிக்கும் பயணி ஒருவருக்கு 690 ரூபா கட்டணமாக அறவிடப்படவிருப்பதாகவும் அமல் குமாரகே குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .