2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்னர், அவருக்கு  எதிரான  விசாரணைகள் குறித்து இராணுவத்தினர் மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் குலுகல்லவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் இதனை  மறுத்துள்ளார்.

இராணுவ நீதிமன்ற விசாரணை  என்பது பகிரங்கமாக நடத்தப்படுவதல்லவெனவும், இது தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாது எனவும் லக்ஸ்மன் குலுகல்ல கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .