2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பிள்ளையானின் கட்சி பொதுத்தேர்தலில் தனித்து போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும், தமது கட்சிக்குள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இதனையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்ததாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதியவர்கள் சிலரை அறிமுகப்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் எமது இணையதளத்திற்கு அவர் கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு சின்னத்தில் போட்டியிடவிருப்பதாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானம், தமது கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவித விரிசலையும் ஏற்படுத்தாது எனவும் ஆசாத் மௌலான சுட்டிக்காட்டினார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .