2021 ஜூன் 16, புதன்கிழமை

யாழ்.குண்டுவெடிப்பு குறித்து இன்று மாஜிஸ்டிரேட் விசாரணை

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

மாஜிஸ்டிரேட் நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறும் எனவும், இச்சம்பவம் குறித்து இதுவரை சந்தேகப்படக்கூடியதாக எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத்துறை இந்துக்கல்லூரி மாணவர்கள் கண்டெடுத்த பொருளொன்றை வீச முற்பட்டபோது வெடித்ததாக பொலீஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின்போது இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் காயமடைந்தனர்.     இக்குண்டு எவ்வாறு அந்த இடத்துக்கு வந்தது என்பது குறித்து யாழ் பொலீஸார் விசாரித்து வருவதாகவும் பொலீஸ் அத்தியட்சகர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .