2021 ஜூன் 14, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டி?

Super User   / 2010 பெப்ரவரி 17 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என்றும் அக்கட்சியின் பிரமுகர் ஒருவர் இன்று தமிழ்மிரருக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீடம் இன்று அல்லது நாளை கூடவுள்ளது.

இங்கு கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அப்பிரமுகர் மேலும் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .