2021 ஜூன் 16, புதன்கிழமை

போலி கிரெடிட் அட்டை இலங்கை வாலிபர் சென்னையில் கைது

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல போலி கிரெடிட் அட்டைகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு  இலங்கையர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார், என்று இந்து பத்திரிகை கூறுகிறது. 
சஞ்சீவ் காந்த் எனும் இலங்கை வாலிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
லேப்டாப் கணனி ஒன்றும் மற்றும் கணணி உதிரிகளும் எக்மோரில் வாங்க  முனையும்  போது கடைக்காரர் கொடுத்த புகாரை அடுத்து அவர் சென்னை க்ரைம் பிரான்ச் பொலிசாரினால் (CCB ) கைதானதாககூறப்படுகிறது. கைதின் போது அவரிடம் மூன்று போலி அட்டைகள் இருந்ததாக போலீஸ் தரப்பு கூறுகின்றது.
சஞ்சீவ் தங்கியிருக்கும் ஆலப்பாக்கம்  வீட்டில் இருந்து 110 போலி டெபிட் அட்டைகளும்  மற்றும் எழு போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறியது.
தமிழ் நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சஞ்சீவ் ஒரு பிகாம் பட்டதாரியாவார் , 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .