2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இந்திய அதிகாரிகளுடன் கோத்தபாய ராஜபக்ஸ பேச்சு

Super User   / 2010 பெப்ரவரி 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரையும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரையும் இன்று மாலை  கோட்டாபய ராஜபக்ஸ சந்திக்கவிருப்பதாக புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் அதிகாரி ஒருவர்  கூறினார்.

இந்தியாவில் நடைபெறும் 2010ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஸ, நாளை இலங்கைக்கு திரும்பவிருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்திய உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில்  இலங்கை உயஸ்தானிகர் பிரசாத் காரியவசம் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .