2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சனத் இரண்டு களங்களிலும் ஆடலாம்; கிரிக்கெட் சபை பச்சைக்கொடி

Super User   / 2010 பெப்ரவரி 20 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய விளையாட்டுத்துறையில் ஈடுபடும் அதேவேளை,அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும் கிரிக்கெட் கட்டுபாட்டுச்சபை அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜயசூரிய போட்டியிடவுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் சனத் ஜயசூரியவின் விளையாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை
இலங்கை கிரிக்கெட் கட்டுபாட்டுச்சபையின் பேச்சாளர் நிஷாந்த ரணதுங்க டெயிலிமிரர் இணையதளத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .