2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை முழுவதும் யானைச்சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Super User   / 2010 பெப்ரவரி 20 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் வடக்கு,கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிடத்தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டரங்கள் இன்று தெரிவித்தன.

ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட வேண்டியதன் காரணமாக  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருக்கு  போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்காது  என்றும் அஞ்சப்படுகிறது.

அம்பாறை,கொழும்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆசனங்களை ஒதுக்குவதில் முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் தமிழ் மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வடமாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்தும் இதுவரை  முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  Comments - 0

 • Chitraguptan Monday, 22 February 2010 07:55 AM

  Digamadulla M.P Naushad Majeed will join Minister Athaulla's party very soon.

  Reply : 0       0

  1989boy Monday, 22 February 2010 07:20 PM

  எப்பிடியோ மரத்த யானை சாப்பிட்டிட்டு இதன் உண்மைங்க

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .