2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ரணிலின் அலுவலகத்தில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் கூட்டம் தற்போது ஆரம்பம்

Super User   / 2010 பெப்ரவரி 21 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

இன்று இரவு 8.30 மணியளவில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தீர்க்கமான முடிவுகள் பலவற்றை எடுக்கக்கூடிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் மிரர் இணைய தளத்துக்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்  ஹகீம் உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இதில் பல காரசாரமான விவாதங்கள் இடம்பெறலாம் என்றும்,எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடுகள்,தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஆகியன குறித்தும் முக்கியமாக ஆராயப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கல் தெரிவித்தன.

இதேவேளை,முஸ்லிம் காங்கிரஸின் ஆசன ஒதுக்கீடு விவகாரம் இன்று கலந்தாலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .