2025 ஜூலை 12, சனிக்கிழமை

தேர்தலில் போட்டியிடுவதா?அர்ஜுண ரணதுங்க இன்று அறிவிப்பார்

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதா,இல்லையா என்ற முடிவை தாம் இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க சற்று முன்னர் தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரியவின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ் மிரர் கேள்வி எழுப்பியது.

இப்போதைக்கு தன்னால் எதுவும் கூறமுடியாது என அர்ஜுண ரணதுங்க பதிலளித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜுண ரணதுங்க,கடந்த ஜனாதிபதித்தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .