2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஹஷானுக்கு த்தடை:சனத் ஜயசூரியவுக்கு அனுமதி;இதுதான் அரசியல்-அர்ஜுன ரணதுங்க

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

ஹஷான் திலகரத்னவுக்கு அரசியல் காரணமாக இலங்கை அணியின் முகாமையாளர் பதவி கொடுக்காத அரசாங்கம்,சனத் ஜயசூரியவுக்கு மாத்திரம் அனுமதியளித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் பேட்டியளித்த இலங்கை தேசிய கிரிக்கட் அணி, கிரிக்கட் இடைக்கால சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க,சனத் ஜயசூரியவின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பும் தெரிவித்தார்.

எனினும்,சனத் ஜயசூரிய விளையாட்டிலிருந்து கொண்டு அரசியல் செய்வதாக இருந்தால்,அரசியலும் விளையாட்டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.  

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொகுகே, ஹஷான் திலகரத்னவுக்கு அரசியலை காரணம்காட்டி இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவிக்கு தடை விதித்தார்.

இதுதான் நாட்டின் இன்றைய நிலைமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .