2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தனித்துப்போட்டியிடுவதா? இல்லையா? ஈ.பீ.டீ.பீ இன்று இறுதிமுடிவு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் ஏனைய  மாவட்டங்களிலும்   தனித்துப்போட்டியிடுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் ஈ.பீ.டீ.பீ எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி போட்டியிடவுள்ளது என்ற கருத்து எழுந்துள்ள நிலையில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழ்மிரர் தொடர்புகொண்டது.

தமது கட்சி இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை,கட்சியின்  ஆதரவாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.

எனினும்,தீர்க்கமான ஒரு முடிவு இன்று தன் கட்சியினால் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

வட பகுதியின் தீவுப்பகுதிகளில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெரும் ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0

  • RAM Tuesday, 23 February 2010 09:33 PM

    தமிழ் மக்கள் அனைவரது எதிர்பார்ப்பு EPDP தனித்து போட்டி இடவேணும் என்பதே ...நன்றாக தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் அபிலாசைகலய் கருத்தில் l கொண்டு தீர்க்கதரிசனமான முடிவு EPDP யால் அறிவிக்கப்படும் என நம்புகிறோம் ....TNA போன்ற கட்சிகள் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை எமாடாது இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் வீணை சின்னத்தில் போட்டி இடுவதன் மூலமே அவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்கமுடியும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .