2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வுக்கு அமெரிக்கா வலியுறுத்து

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறினார்.

இதேவேளை, இராணுவப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கொழும்பு சட்ட ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும் எனவும் றொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .