2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீதர் பிச்சையப்பாவுக்கு தமிழ்மிரர் இணையதளத்தின் இறுதி அஞ்சலி

Super User   / 2010 பெப்ரவரி 23 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இளநெஞ்சன்'முர்ஷிதீன்

மனித நேயக்கலைஞனாகவும், பல்துறை சார்ந்த வித்தகனாகவும், இலக்கியப்படைப்பாளியாகவும்  திகழ்ந்த  ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இறுதிக்கிரிகைகள் இன்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீதர் பிச்சையப்பாவின் பூதவுடல் காலை 11.00 மணியிலிருந்து மாலை 2.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக கொழும்பு கலாபவனத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

நகைச்சுவையுணர்வும், நட்பை மதிக்கும் தன்மையும் கொண்ட ஸ்ரீதர் பிச்சையப்பா, உலகை விட்டுப்பிரிந்தாலும், எமது உள்ளங்களை விட்டு என்றும் பிரிய மாட்டார்.

கடந்த 20ஆம் திகதி சுகவீனம் காரணமாக கொழும்பில் காலமான ஸ்ரீதரின் இறுதிச்சடங்குகள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் மிரர் இணையதளம் இந்தச்செய்தியை உடனடியாக வெளியிட்டிருந்தது.எனினும்,பின்னர் இந்த முடிவில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக எமக்கு அறியக்கிடைத்தது.

  Comments - 0

  • இளைய அப்துல்லாஹ் Wednesday, 24 February 2010 10:30 PM

    நல்ல கலைஞன் மனதார கவலையடைகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .