2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் மீள் இணக்கப்பாட்டுக்கு பிரிட்டிஷ் கோரிக்கை

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மீள் இணக்க மேம்பாட்டுக்காக புதிய மக்கள் ஆணையைப் பயன்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவிடம் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் கடந்த மே மாதம் முடிவடைந்திருக்கிறது.  தேசிய மீள் இணக்கத்தின் ஊடாக அனைத்து சமூகங்களுக்குமான  சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் டேவிட் மில்லிபான்ட் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .