2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கப்பலில் கனடாவுக்கு வந்த கர்ப்பிணி மீதான விசாரணையை துரிதமாக்க வலியுறுத்தல்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.வி. சன் ஸீ கப்பலில் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகளில் ஒருவரான கர்ப்பிணிப் பெண் தொடர்பான அடையாளம் காண்பதற்கான சோதனைகளை விரைவாக மேற்கொண்டு, அவரை விடுவிக்கும்படியும் இல்லாவிடின் அவர் சிறையிலிலேயே குழந்தை பிரசவிக்க நேரிடும் எனவும் கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவரகத்திடம் சட்டத்தரணியொருவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி கனடாவை சென்றடைந்த 491 அகதிகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் நால்வரும் அடங்கிருந்தனர். இவர்களில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப்பெண்ணுக்கு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிரசவம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்  அவர் தொடர்பாக அதிக கவனம் செலுத்தாவிடின் சிறையிலேயே அவர் குழந்தையை பிரசவிக்க நேரிடும் எனவும் சட்டத்தரணி மாலினி டியோனிசியஸ் தெரிவித்துள்ளார்.


அப்பெண், வான்கூவரிலுள்ள அலோட் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் கப்பலில் வந்த கணவர், பிரேஸர் பிராந்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அப்பெண் தொடர்பான இரண்டாவதுகட்ட விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாததால் அவரை தொடர்ந்தும் தடுத்துவைக்குமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை  உத்தரவிட்டுள்ளது. செப்டெம்பர் 17 ஆம் திகதி அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி அகதிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .