2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர்

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(என்.பரமேஸ்வரன்)

மாத்தறை தெனியாயவைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளதுடன் அதே சைக்கிளில் இன்று மாத்தறை நோக்கித் திரும்பவுள்ளார்.

மல்லவாராச்சிகே ரட்ணபால எனும் இந்நபர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு அவருக்கு 8 நாட்கள் தேவைப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வழியிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களிலும் தான்  தங்கியதாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.

'யுத்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்தைப் பார்த்ததில்லை. சமாதானம் ஏற்பட்டதையடுத்து நான் இங்கு வந்துள்ளேன். சகல இடங்களையும் பார்ப்பதற்கான சிறந்த வழி சைக்கிளில் செல்வதுதான் என நான் கருதினேன். இரவில் தங்குமிடம் வழங்கியமைக்காக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கடமைப்பட்டுள்ளேன்' என  டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதை அவரின் குடும்பத்தினர் எதிர்த்ததாகவும் ஆனால் தான் தனது திட்டத்தை முன்னெடுத்ததுடன் தற்போது மிக மகிழ்ச்சியான மனிதராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0

  • xlntgson Sunday, 29 August 2010 08:20 PM

    யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்குக்கு வந்தால் துவிச்சக்கர வண்டியிலேயே, நன்றாக இருக்கும் ஊடகங்களுக்கு அறிவிக்காமல்! பின்னர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கலாம். இல்லாவிட்டால் அதை பெரிது படுத்தி பன்னிப்பன்னிப்பேசி கெடுத்து குட்டிச்சுவராக்கிவிடுவார்கள். சிங்களம் தெரியாத ஒருவராக இருக்க வேண்டும். சற்றே ஆங்கிலத்தில் கதைக்கலாம்.தமிழ் தெரிந்த சிங்களவர் அநேகர் இருக்கின்றனர். அவர்களுடைய தமிழ் புரிந்து கொள்ள உதவியாக சற்றே சிங்களம் கலந்த தமிழும் பேசலாம். இளைஞர் ஒருவராக இருந்தால் சிறப்பு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .