2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஹஜ் வழிகாட்டி நூல் இன்று கையளிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(றிப்தி அலி)

சட்டத்தரணி என்.எம்.சஹீட்டினால் தயாரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி நூல் இன்று ஹஜ் குழு தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானாவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார்.

இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஹஜ் மருத்துவ குழுவின் பணிகள், அக்குழு ஹஜ் யாத்திரிகர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சேவைகள், ஹஜ் நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும், ஹஜ்ஜுக்கான கட்டணங்கள் எவ்வாறு அறவிடப்பட வேண்டும் மற்றும்  சகல தகுதிகளையும் கொண்ட ஹஜ் முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவற்றை அடிப்படையாகக் இவ்வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

 இன்று  ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானாவிடம் கையளிக்கப்படவுள்ள ஹஜ் முகவர்களுக்கான வழிகாட்டி மிக விரைவில் ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக கையளிக்கப்படவுள்ளது என ஹஜ் குழு முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0

  • Zain Tuesday, 31 August 2010 05:54 PM

    என்னதான் வழிகாட்டி நூல் தயாரித்தாலும் அமைச்சர்கள், அதிகாரிகள், முகவர்கள் உட்பட அனைவரும் இதனை ஒரு இலாபமீட்டும் ''பிஸ்னஸ்'' ஆக அல்லவா மேற்கொள்கிறார்கள்.
    சம்பிரதாயத்துக்காக ஓரிரு கடமைகளைச் செய்தாலும் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகள் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
    இப்பிரச்சினைக்கு மனித வழிகாட்டல்கள் ஒருபோதும் தீர்வாகாது! மாற்றமாக அனைவரும் இறைவழிகாட்டலை ஏற்று அதனைப் பின்பற்றினாலே தீர்வு சாத்தியமாகும்.!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .