2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

ஐ.நா அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமரடுரு அமரஜீவ)

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகளை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் குழுவொன்று நேற்று திங்கட்கிழமை அந்த மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

இந்தக் குழுவினர் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளுக்கு சென்றதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் 'டெய்லி மிரர்' இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ஆராய்ந்து அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.(DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .