Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
உத்தேச அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் அடுத்த வாராம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இத்தகைய 'கொடுமையான' அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் ஆணை பெறவில்லை எனக் கூறினார்.
நீதிமன்றத்தில் ஐ.தே.க வழக்குத் தொடுக்குமா எனக் கேட்கப்பட்டபோது, கட்சியின் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியபின் இது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது சுய விருப்பின் அடிப்படையில் வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
01 Jul 2025