2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

புலிகளுக்கு உதவியதாக இலங்கையர்கள் மீது ஜேர்மனியில் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கொள்வனவு மற்றும் பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஜேர்மன் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர்.

ஜேர்மன் பிரஜைகளான சசிதரன் (33), ரி.கோணேஸ்வரன் மற்றும் இலங்கையரான விஜிகனேந்திரா (35) ஆகியோர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டத்தை மீறியதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும் கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய யூனியனின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஜேர்மனின் மேற்குப் பிராந்திய பகுதியில் கைது செய்யப்பட்டனர். 

2007 ஜூலை தொடக்கம் 2009 ஏப்ரல்  வரை 3 மில்லியன் யூரோ பணத்தை ஜேர்மன் தமிழர்களிடமிருந்து விடுதலை புலிகள் ஆயுதம் மற்றும் ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்ய பரிமாற்றியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

வி.எஸ். விஜேகனந்திரா புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர்கள் எப்போது விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .