2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜா - எல பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவந்தம வீதியின் பட்டஓயா பாலத்துக்கு அருகிலிருந்து மனித எலும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளை நிற பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த மனித எலும்புக்கூடுகள், நீதிவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைகளுக்காக ராகமை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஜா - எல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (M.M)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .