2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பொன்சேகா இன்றும் இராணுவ நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற அமர்வு இன்று நண்பகல் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக அவ் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சரத் பொன்சேகா தற்போது சுகவீனமுற்றிருப்பதாக நீதிமன்றத்திடம் மருத்துவ அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

இந்நிலையில், இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றும்  சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.(DM)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .