2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

புலிகளின் விமானப் பாகங்கள் கண்டுபிடிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான எரியூட்டப்பட்ட விமானப் பாகங்கள் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யுத்தம் உக்கிரமாக நிலவிய காலத்தில் வெள்ளமுள்ளி வாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கொள்கலன் ஒன்றில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் கடைசி கட்டத்தில் புலிகள் அவற்றுக்கு தீவைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்து விமானப் படை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

;
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .