2025 ஜூலை 12, சனிக்கிழமை

நிலத்தின் உரிமையைக் கோரி நீதிமன்றம் செல்ல வேடுவத் தலைவர் தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சமூகத்திற்குச் சொந்தமான நிலத்தின் உரிமையைக் கோரி தான் நீதிமன்றம் செல்லுவதற்குத் தீர்மானித்திருப்பதாக வேடுவத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

றதுகலையில் தமது சமூகத்திற்குச் சொந்தமாக  19 ஏக்கர் காணியின் உரிமையைக் கோரி கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் மொனராகலை நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பதுடன், இதனை எதிர்த்தே தான் நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாகவும்  றதுகலை வேடுவ சமூகத் தலைவர் கூறினார்.

இந்த நிலத்தில் தனது தந்தை மற்றும் தனது முன்னைய சமூகத்தினர்   அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த நிலம் தமக்கே சொந்தமாகும் எனவும் றதுகலை வேடுவ சமூகத் தலைவர் தெரிவித்தார்.(DM) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .