2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கோஷ்டி மோதலில் பல்கலை மாணவர்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஷெர்வானி சினோன்)

 

கட்டுநாயக்கவில் இரு குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் ஏனைய இருவரும் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலுள்ள பொறியியல் கல்லூரியொன்றின் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு  மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பாக மூவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


அதேவேளை கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் ரயில்கடவையில் பலியாகியுள்ளனர்.
 

இச்சம்பவத்திற்கும் மேற்படி கோஷ்டி மோதலுக்கும் தொடர்பில்லை எனவும் ரயில் சமிக்ஞையை புறக்கணித்துச் சென்றதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .