2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கொத்து ரொட்டி தயாரிப்பாளருக்கு எதிராக ஒலி மாசு வழக்கு

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாரூக் தாஜுதீன்)

கொத்துரொட்டி தயாரிப்பின் மூலம் சுற்றாடலை ஒலி மாசடைதலுக்கு உட்படுத்தியதாக கொத்து ரொட்டி தயாரிப்பாளர் ஒருவர் மீது கோட்டே மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாவல, கொஸ்வத்த சந்தியை சுற்றியுள்ள மக்கள் மேற்படி கொத்து ரொட்டி தயாரிப்பு இரைச்சல் காரணமாக இடையூறு ஏற்படுவதாக புகாரிட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் லால் ரணசிங்க கூறினார்.

குறித்த கொத்துரொட்டி தயாரிப்பாளர் தான் நிரபராதி என  நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்பின் அவரை நீதவான் பிணையில் விடுதலை செய்தார்.

இவ்வழக்கு ஜனவரி 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 


  Comments - 0

  • xlntgson Tuesday, 07 September 2010 09:29 PM

    அதற்கொரு இயந்திரத்தை ஜப்பானிலிருந்து தருவித்து கொத்து ரொட்டி விலையை இரண்டு மடங்காக்கி விடுவர். எதையாவது தடை செய்வதனால் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை, மாற்று ஏற்பாட்டை கண்டு பிடித்து விடுவர். மக்கள் பாடு தான் திண்டாட்டம். இறைச்சியை விட்டால் மீன் மாதிரி. கோப்பியை விட்டால் தேநீர். கள்ளுக்கு பதிலாக சாராயம் என்று ஏதாவது வியாபார உத்திகளுக்கு பஞ்சமில்லை. சந்திக்கு ஒரு ஹோட்டல் என்று இருந்தால் பரவாயில்லை சத்தம் குறைவாக இருக்கும். கிட்ட கிட்ட கடைகள் பார்களுக்கும் ரேஸ் புக்கிகளுக்கும் பக்கத்தில் சொப்பிங்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .