Super User / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்னா பரனமன்ன)
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ள ஐ.தே.க. எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.
"உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் என்பதால் அதற்கு எதிராக வாக்களிப்பது என கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தீர்மானத்தை மீறி அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐ.தே.க. எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025