2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மூன்றரை வயது சிறுமி கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)

மூன்றரை வயதான சிறுமியொருத்தி  கைவிடப்பட்ட நிலையில் எஹெலியகொடை பொது மைதானத்திலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளாள்.

மைதானத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தனது பெயர் 'செல்லமேரி' என அச்சிறுமி கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி மருத்துவ சோதனைகளுக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாள். அதன்பின் அவள் சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .