2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை

Super User   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜ்முதீன்)

லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி  பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய அதிகாரிகளுடன்  இலங்கை அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இது தொடர்பான விபரமான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

புனே நகரிலுள்ள ஜேர்மன் பேக்கரியொன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட  29 வயதான மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவர்  தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் அந்த பயிற்சிமுகாம் எந்த இடத்தில் இருந்தது என்பது குறித்த விபரங்களை தற்போது பொலிஸார் பெய்க்கிடமிருந்து பெற்றுவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .