2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சுபீட்ச இலங்கையை உருவாக்க கடினமாகப் பாடுபடுவோம்: அமைச்சர் பௌஸியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செ

Super User   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுபீட்ச இலங்கையை உருவாக்க கடினமாகப்  பாடுபடுவோம் என இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது'

இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் 'ஈதுல் பித்ர்' ஈகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். மகா கருணையாளனாம் அல்லாஹ்வின் ஆணையையேற்று ஒரு மாதகால நோன்பினைப் பூர்த்தி செய்த இத்திருநாள் நோன்பிருந்தோர் உள்ளங்களில் வாழ்க்கையில் வசதி குறைந்தோர் பற்றிய கருணை எண்ணங்களை தூண்டச் செய்கின்றது.

மன்னிப்பு, பொறுமை, தாரளத்தன்மை, மனிதாபிமானச் செயல்கள் மூலமும் ஆத்ம பரிசோதனையின் மூலமும் எமது ஆத்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை இந்த புனித நோன்பு எமக்கு வழங்கியது. தமது பாவச்செயல்கள்  குறித்து மனம் வருந்தி ரமழானில் மன்னிப்பை மன்றாடுவோர்க்கு அல்லாஹ் மிகக் கருணையோடு மன்னிப்பளிக்கின்றான். இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காகவும் அமைதியான வாழ்க்கையை பெற்றுக் கொள்வதற்காகவும் அல்லாஹ்வின் பாதுகாப்பு, வழிகாட்டல், பலம் மற்றும் உதவிகளை வேண்டிக் கொள்வதற்கான காலம் இதுவாகும்.

உண்மையான பயபக்தியுடனும் தூய்மையான உள்ளத்துடனும் நாம் முழுதாக அல்லாஹ்வின் இறைமைக்குள் சரணடைவோமாயின் நாம் வேண்டும் அனைத்தையும் தருவதற்கு அவன் தயாராயிருக்கிறான். நம்பினோரை அவர் கைவிடுவதில்லை.

இன்று நோன்பின் பூர்த்தியை அடுத்து முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களாயுள்ளதோடு அதன் பயனாக சமூகத்துக்கும் நாட்டுக்கும் தங்களது கடப்பாடுகளை நிறைவேற்ற சக்தி பெற்றவர்களாயும் உள்ளனர். இன்று எம்முன்னேயுள்ள பாரிய பொறுப்பு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த மக்கள் அனைவருக்கும் அவர்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கான சுபீட்ச இலங்கையை உருவாக்குவதாகும்.

எனவே, மகிழ்ச்சிகரமான இன்றைய தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அலாஹ்வின் கடமையை நிறைவேற்றியதனால் பெற்ற புதுத்தெம்பின் பலம் கொண்டு நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் சமூகத்தை எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் எமது கடின பங்களிப்பினை வழங்கத் திடசங்கற்பம் பூணுமாறும் அதேவேளை அனைத்து மக்கள் மத்தியிலும் அன்பும் சகோதரத்துவமும் ஓங்கச் செய்யும் சமுதாயமாகத் திகழுமாறும் வேண்டுகின்றேன். எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .