2021 ஜூன் 19, சனிக்கிழமை

இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்: தமிழ்க் கட்சிகள் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை  தமிழ்க் கட்சிகள் ஒன்றியத்தின் சில கட்சிகள் சந்தித்து கலந்துரையாடல்களை  நடத்தியுள்ளன.

இடம்பெயர் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் வேறிடங்களில் மீள்யேற்றப்படக் கூடாது எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கலந்துரையாடலின்போது தமது தீர்மானத்தை முன்வைத்தன.

அத்துடன், மட்டக்களப்பில் அண்மையில் கடத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கூடிய விரைவில் தனது கணவன் கண்டுபிடிக்கப்படாவிட்டால், தீக்குளிக்கத் தயார் என  மட்டு மாநகரசபை உறுப்பினரின்  குடும்பத்தவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .