2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

அனுமதியற்ற வீடுகளைத் தகர்க்கத் திட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருலப்பனை கால்வாய், சித்தார்த்தபுர மற்றும் வேலுவனாராம வீதிப் பகுதிகளிலுள்ள அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் விரைவில் தகர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் அண்மையில் சித்தார்த்தபுர பகுதிக்கு வந்து சட்டவிரோத வீடுகள் விரைவில் தகர்க்கப்படும் என அறிவித்ததாக அங்குள்ள மக்கள் நேற்று தெரிவித்தனர்.

அம்மக்களுக்கு கொழும்புக்கு வெளியே காணிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு குடும்பங்களுக்கு ஏற்கெனவே அவிசாவளையில் காணி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரவித்துள்ளனர்.

வீட்டு மதிப்பீட்டு எண் உட்பட சகல விபரங்களையும் பொலிஸார் திரட்டியதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸாரிடம் கேட்டபோது அப்பகுதியில் எத்தனை அனுமதியற்ற வீடுகள் உள்ளன என அறிவதற்காக தாம் ஆய்வொன்றை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர்.

அங்குள்ள பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், பொலிஸ் தலைமையகத்திலிருந்து வந்த உத்தரவுக்கிணங்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான அறிக்கை ஏற்கெனவே பொலிஸ் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதியற்ற கட்டிடங்கள் மாத்திரமே தகர்க்கப்படும் எனவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .