2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க எம்.பிகளின் தீர்மானம் குறித்து ரணிலுக்குத் தெரியாதாம்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனக் குழுவாக செயற்படப்போவது குறித்து தனக்கு எவரும் அறிவிக்கவில்லை என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

'ஐ.தே.கவின் 25 எம்.பிகள் சுயாதீனமாக செயற்படப்போவதாக ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தன. அத்தகைய முயற்சி குறித்து எவரும் எனக்கோ சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சி பிரதம கொறடாவுக்கோ அறிவிக்கவில்லை. பெயர் குறிப்பிடப்பட்ட பல எம்.பிகள் தாம் அத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இது குறித்து தெரிவிக்கப்பட்டால் அவ்விடயம் செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் என ரணில் கூறினார்.
எதிர்வரும் நாட்களில் தான் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் ரணில் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .