2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 02 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 17 பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 29 பேர் கைதுசெய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தரின் சதிமுயற்சியினாலேயே  17 பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு முயற்சித்ததாகவும் ஆனால், அவர் அங்கு இல்லாததால் உயர் கல்வி அமைச்சின் செயலாளரை இன்று தாம் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர் ஒருவர் தெரிவித்தார்.  

'எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமென நாம் நினைக்கின்றோம்.; இவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்போம்' என அவர் கூறினார்.

அத்துடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன உட்பட  29 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி வோர்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைச் சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .