2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

வெலிக்கடை மோதல்; விசாரணை ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெலிக்கடை சிறைக்கைதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கான காரணங்களை அறிவதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சோதனை நடவடிக்கையே சிறைச்சாலையிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கைதிகள் சிறைத் தண்டனை பெறுவதற்கு பொலிஸாரே காரணம் என்ற பகைமை உணர்வே இந்த மோதலுக்கு காரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .