2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

2010 ஜனவரி 26 இல் ஜனாதிபதி தேர்தல்;ஆணையாளர் அறிவிப்பு

Super User   / 2009 நவம்பர் 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமிகு ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் திகதிக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் இன்று மாலை விடுத்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் பலம்வாய்ந்த வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ,முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .