2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கொழும்பு துறைமுக அலைத்தடுப்பு அணை நிர்மாணத்தின் பெரும்பகுதி பூர்த்தி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

கொழும்புத் துறைமுக விரிவாக்கல் செயற்றிட்டத்திற்கான அலைத்தடுப்பு அணையின் வேலையில் பெரும்பகுதி முடிவடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை இன்று தெரிவித்துள்ளது.

5.1 கிலோமீற்றர் நீளமான அலைத்தடுப்பு அணையின் 4.6 கிலோமீற்றர் பூர்த்தியாகிவிட்டதென  இலங்கை துறைமுக அதிகாரசபை கூறியுள்ளது.

'பருவக்காற்றுக் காரணமாக மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை மண்வாரும் வேலையை நிறுத்தவுள்ளோம்' என பிரதம பொறியியலாளரும் திட்டப் பணிப்பாளருமான சுசந்த அபயசிங்க கூறினார்.

இந்;த திட்டம் ஏப்ரல் 2012ஆம் ஆண்டில் பூர்த்தியாகுமெனவும் அவர் கூறினார்.

விரிவாக்கப்பட்ட புதிய துறைமுகத்தினுள் அமையவுள்ள நகரத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச கப்பல் போக்குவரத்து கைத்தொழிலிருந்து வரும் சேவைகளுக்கான அதிகரித்த கேள்விக்கு ஈடுகொடுக்கும் வகையில் கொழும்பு துறைமுகமும் அதன் துறைகளும் 2008 ஏப்ரலிலிருந்து அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையும் வழங்குவதாகவும் அவர் கூறினார். துறைமுக அபிவிருத்தி வேலைகள் பூரணமானதும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யுமென அபய குணவர்தன கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .