2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

'மு.கா. வென்ற சபைகளும் ஐ.ம.சு.மு கைப்பற்றிய சபைகளே'

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்ற சபைகளே என கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்த பகுதிகளை மீளக்கட்டியொழுப்பும் நடவடிக்கையில் கட்சி ஈடுபடவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் இரண்டு நாள் வதிவிட பயிற்சி நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்வரும் மே 15ஆம் திகதி வன்னி மாவட்டத்தில் இடம்பெறும் என கட்சி தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 50 பேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தெரிவுசெய்ப்பட்ட 10 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் வைத்து நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.


  Comments - 0

 • jaliyath Saturday, 26 March 2011 06:13 PM

  வாழ்க முஸ்லிம் காங்கிரஸ் வளர்க மரச்சின்னம் .

  Reply : 0       0

  xlntgson Saturday, 26 March 2011 08:54 PM

  மரம் வளர்ந்தால் அதிக இலைகளை கொண்டிருக்கும், வாதுகளை வெட்டி விடாமல் இருந்தால் சரி?

  Reply : 0       0

  s.athem bhawa Sunday, 27 March 2011 12:56 AM

  அல்லாஹு அக்பர்

  Reply : 0       0

  Raheem Sunday, 27 March 2011 04:31 AM

  தமிழ் சகோதரர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புமாதிரி முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே உரிமைக்குரல் எழுப்ப முடியுமென இத்தேர்தல் எடுத்துகாட்டி உள்ளது. குறைகளை திருத்திஇ நடைபெற இருக்கும் வடக்கு கிழக்கு மாகான சபைத்தேர்தலுக்கு புறப்படுடுவோம்.

  Reply : 0       0

  MUjeeb Sunday, 27 March 2011 02:59 PM

  அல்ஹம்துலில்லாஹ்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .